இலங்கையின் பல பகுதிகளில் திடீர் மின்சார தடை

கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளில் திடீரென மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலாலை எமது தமிழ்வின் செய்தி சேவை தொடர்பு கொண்டது.

இதன்போது அவர் கூறுகையில், இந்த திடீர் மின்தடை குறித்து தனக்கு எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

என்ற போதும் இது குறித்து நாட்டின் பல பகுதிகளில் இருந்து தமக்கு முறைப்பாடு கிடைத்து வருவதாகவும் கூறியுள்ளார். 
புதியது பழையவை