கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் வகையில், தொழிற்சந்தை நிகழ்வு, இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால், மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வானது, இன்று முற்பகல் 10.00 மணிக்கு, மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில், மேலதிக அரசாங்க அதிபர் க.சிறிமோகனன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட இணைப்பாளருமான வை.தவநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.