பெண் ஒருவரை குடும்பத்தாருக்கு தெரியாது கடத்திச் சென்ற வாகனம் விபத்து

கிளிநொச்சி - வட்டக்கச்சி புதுப்பாலம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு(06) இடம்பெற்ற இவ்விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
டிப்பர் ஒன்றில் பெண் ஒருவரை குடும்பத்தாருக்கு தெரியாது கடத்திச் சென்ற நிலையில், குறித்த டிப்பரை பெண்ணின் உறவினர்கள் துரத்திய சந்தர்ப்பத்தில் விபத்து இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்துக் குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை