திருகோணமலை– கண்டி பிரதான வீதியில்-பேருந்து விபத்து

திருகோணமலை– கண்டி பிரதான வீதியின் கப்பல்துறை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியினை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதுண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது 26 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புதியது பழையவை