கிளிநொச்சி பளை பகுதியில் உள்ள அம்மன் ஆலய சூழலில் அமைந்துள்ள வேப்பரத்திலிருந்து பால் வடிகின்றதாக கூறப்படுகின்றது.
அரத்தி நகர் வரலாற்று ஆலயமான அரத்தி அம்மன் ஆலயத்தில் வேப்பமரத்தில் இருந்தே இவ்வாறு பால் வடிவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை கடந்த காலத்தில் இதே போன்று வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய சூழலில் அமைந்திருந்த வேப்பமரத்திலிருந்து பால் சொரிந்தது.
இந்த நிலையில் அதே காட்சி தற்போது இவ் ஆலயத்திலும் நிகந்துள்ள நிலையில் அதனை பார்ப்பதற்காக அங்கு மக்கள் கூட்டம் படையெடுத்துவருவதாக கூறப்படுகின்றது.


