மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்

குருணாகல் பன்சியாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொம்பகமுவ பிரதேசத்தில், நபரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என்று, பன்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்ச்செய்கைகளை பாதுகாக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்குண்டே குறித்த நபர் உயிரிழந்தார்.

தொம்பகமுவ, மகுல்பொத்த பிரதேசத்தை சேர்ந்த 62 வயது நபரே இவ்வாறு மரணமடைந்தார்.
பிரேதப் பரிசோதனைக்காக குருணாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மின்வேலியை அமைத்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை