திருத்தப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று வெளியாகும்

புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய சுகாதார வழிகாட்டல்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், திருத்தப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று வெளியிடப்படவுள்ளதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை