நீர்கொழும்பில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (30-01-2022) அதிகாலை கம்பஹா - நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது,
மேலும் குறித்த சுற்றிவளைப்பின் போது நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது சம்பவத்தில் விபச்சார விடுதியை நடத்தி வந்த நபரும் பெண்கள் மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இவ்வாறு கைதானவர்கள் தங்கொட்டுவ, பத்தரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 21, 46 வயதுடைய நால்வரே என தெரியவந்துள்ளது.விபரச்சார விடுதியை முற்றுகையிட்ட பொலிஸார்! 3 பெண் உட்பட நால்வர் கைது செய்தனர்.