யாழ்.வளைவுக்கு அருகில் டிப்பர் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நல்லூர் - செம்மணி வீதி ஊடாக வந்த மோட்டார் சைக்கிள், யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் ஏற முற்பட்ட போது, யாழில் இருந்து வந்த டிப்பர் வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


