மட்டக்களப்பு மாவட்ட தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தல், தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பினை வழங்கும் நோக்கில் கிராமிய தொழிற்துறை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நான்காவது கைத்தொழில் வளாகம் இன்று திறந்து வைக்கப்பட்டது .
கிராமிய தொழிற்துறை திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் கே.இளங்குமுதன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர்
கே.கருணாகரன், கிழக்குமாகாண முதலமைச்சின் செயலாளர் திருமதி எ.யு .ஜலீல்,கிராமிய தொழிற்துறை திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் கவிதா உதயகுமார் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு கிராமிய தொழிற்துறை திணைக்களத்தின் மட்டக்களப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை நிலையம்,நெசவு தொழில்சாலை மற்றும் கைத்தொழில் பயிற்சி நிலையம் ஆகியன இன்று திறந்து வைக்கப்பட்டன.