ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று

ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று(22) ஆரம்பமாகவுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடாத்தப்படவிருந்த  இந்த பரீட்சையானது கொரோனா தொற்று காரணமாக  பிற்போடப்பட்டிருந்த நிலையிலேயே இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில் தமிழ்மொழி மூலம் 85 ஆயிரத்து 445  பரீட்சாத்திகளும்,  சிங்களமொழி மூலம்  2 இலட்சத்து  55 ஆயிரத்து 62 பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

மேலும் 496  பரீட்சை மத்திய  நிலையங்களில் பரீட்சைகளுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பரீட்சைக்கு தோற்றவுள்ள கொரோனா தொற்றுக்குள்ளான  பரீட்சார்த்திகளுக்காக  108 விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இம்முறை வினாக்களுக்கு விடையளிக்க  மேலதிகமாக 15 நிமிடங்கள்  வழங்கப்படுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.

மேலும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து செயற்படுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதியது பழையவை