நாட்டில் இன்றைய தினம் மின்தடையினை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இன்று(22) நண்பகல் வேளையில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக சபுகஸ்கந்த அனல்மின் நிலையத்தில் காணப்படும் எரியூட்டப்பட்ட எண்ணெய் எதிர்வரும் சில மணித்தியாலங்களுக்கு மாத்திரமே போதுமானதாக காணப்படுவதாக இலங்கை மின்சாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சபுகஸ்கந்த அனல்மின் நிலையத்திற்கு எரிபொருளை வழங்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருளை வழங்கப்படும் பட்சத்தில் மின்தடையினை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது எனவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக களனிதிஸ்ஸ அனல்மின்நிலையத்திற்கு இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனத்திடம் இருந்து 10 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசல் முழுமையாக வழங்கிவைக்கப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
