இலங்கையில் கொரோனா தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது.
இதன்படி தடுப்பூசி திட்டம் தொடர்பான தேசிய நிகழ்வுகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சுகாதார அமைச்சில் இன்று (29)இடம்பெறவுள்ளது.
அத்துடன் ஒவ்வொரு மாகாணத்திலும் ஆளுநர்களின் தலைமையில் விசேட நலத்திட்டங்கள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று முதல் விசேட பூஸ்டர் தடுப்பூசி வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு பூஸ்டர் தடுப்பூசி ஊக்குவிப்புத் திட்டம் நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அலுவலகங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதி கொரோனா தடுப்பூசி திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் , இதுவரை 51 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.