பிள்ளையான் எனும் பெயர் கொண்ட அரக்கன் தலைமையில் நடந்த கொடூரம்!

மட்டக்களப்பில் 2006 ஜனவரி 29 நாள் நடந்த உண்மைச் சம்பவம் இது .

காத்திரு சோதரியே...

அடங்காப்பற்றென விளித்திடும் 
அறத்துடன் மறமும் கொண்ட
வீர மறத்தமிழ் வீரர்கள் 
செங்கோலோச்சிய வன்னியிலே 
இயற்கை அழகினிலே திளைத்திடும் 
வட்டக்கச்சி எனும் ஊரினிலே
நற்பிறப்பெடுத்து 
கல்வியுடன் நற்பண்புதனை 
நன்றுடனே கற்று
அடக்கமுடன் நல்லறிவும் கொண்டு
குலம் சிறக்க வாழ்ந்திருந்த சகோதரியே பிரேமினியே! 

நற்றமிழை முழுமையுடன் வளர்த்த 
நற்றமிழ் இனத்துக்காக நாளும் உழைத்த
முத்தமிழ் வித்தகராம் விபுலானந்த அடிகள் 
நற்பிறப்பெடுத்த
மீனிசை பாடும் தேனிசை நாடாம்
போர் முரசறையும் மறத்தமிழ் வீரர்களை 
மகிழ்வுடன் பெற்றெடுத்த
மதுரத் தமிழ்மொழியினை மகிழ்வுடன் மலர்ந்தெழச் செய்திடும்
மகிழ் திருவூராம் மட்டக்களப்பினிலே
நற்பண்புடனே இளவல்களை 
கற்றெடுத்து வளர்த்து விடும் கலாசாலையாம்
கிழக்குப் பல்கலைக்கழகத்தினிலே 
உன் கல்வி தனை தொடர்ந்திடவும் 
மலர்ந்திடும் வாழ்விற்காகவும் வழி தேடிப் போனாயே! 

தமிழ் சமூகத்தின் நலத்தினையும்
குடும்பத்தின் நிலைமை தனையும் கருத்திற் கொண்டு
கல்விதனைக் கற்றுக் கொண்டும் 
சமூகப் பணியினையும் ஆற்றுவதற்கே 
தூர நோக்கில் பதியமிடப்பட்ட புனர்வாழ்வுக் கழகத்திலினும் பகுதி நேரப் பணி புரிந்தாயே! 

காலனவன் தன் கணக்கை சாலவே செய்யவே
கல்வி கற்கவென பிறந்த ஊர் விட்டு பக்கத்து ஊர் நோக்கி திட்டமிட்டு அனுப்பினானோ?
மணம் வீசி புகழ் வீசும் எண்ணமுடன் 
மலர்ந்த மொட்டான உன் கனவு 
கொடும் விசம் கொண்ட பதினான்கு தேனீக்களால் கலையப்பட்டதுவோ? 

சொந்த புத்தி இல்லாத வெறிநாய்கள் 
சிங்களவனின் குள்ளநரிக் கூட்டத்தோடு உறவாடிய
சொந்த இனத்துக்கே துரோகம் செய்த சொறி நாய்கள்
பிள்ளையான் எனும் பெயர் கொண்ட
அரக்கன் தலைமையில் வழி நடக்கும்
தெரு நாய்களால்
கல்வி தனைக் கற்க வந்த மண்ணிலேயே கற்பிழந்து உயிரிழந்து போனாயே! 

உன் உடல் தனை ஈவிரக்கமில்லா அந்நாய்கள் இச்சை வெறி தீரப் புசித்துவிட்டு
உடல் உறுப்புகளை ஈவிரக்கமில்லாமல் ஒவ்வொன்றாய் துண்டு துண்டாய்  வெட்டியே 
காட்டினிலே சிதறி வீசினரே
உன் உடலினை அவர்கள் வெட்டிடும் போதினிலே
உன் உலகமே கண் முன் கருக 
வார்த்தைகள் புலம்பலாக உருவெடுக்க 
யாருனைக் காப்பாற்ற வருவாரென
நினைத்தாயோ 
உனையீன்ற பெற்றோரை நினைத்தாயோ 
சகோதர சகோதரிகளை நினைத்தாயோ 
சொல்லிட வார்த்தைகள் இல்லை  என்னிடம் கரைந்திட கண்ணீர் மட்டுமே உள்ளது! 

சோதரியே உனைக் காப்பாற்ற அருகில் நான் இல்லை 
அருகில் இருந்தவர்களுக்கும் காப்பாற்றும் எண்ணமில்லை
தன் சோதரி என்றிருந்தாலும்
இப்படித்தான் தள்ளி நின்றிருப்பார்களோ?

வானிலில் தோன்றிடும் நட்சத்திரமாய் காத்திருந்து பார்
காலம் அவர்களுக்கு கல்லறை கட்டும்
உன் கனவுகளும் நினைவுகளும் கரைந்து போகவில்லை
காத்திரு!!!

குறிப்பு : சகோதரி பிரேமினியுடன் அதே நாளில் "பிள்ளையான் குழு" உறுப்பினர்களால் சித்திரவதை செய்யப்பட்டு கொன்றொழிக்கப்பட்ட அப்பாவிகளான தமிழர் புனர்வாழ்வுக்கழக மனிதநேயப் பணியாளர்களான தருமராஜா வசந்தராஜன் ,சண்முகநாதன் சுரேந்திரன், கைலாசப்பிள்ளை ரவீந்திரன்.அருள்தவராஜா சதீஷ்கரன் ,தனுஷ்கோடி பிறேமினி .தங்கராஜா கதிர்காமர்,காசிநாதர் கணேசலிங்கம் ஆகியோரையும் இந்நாளில் நினைவு கூறுகின்றோம்.

வெண்ணிலா

புதியது பழையவை