ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் குறித்த பல்கலைக்கழகம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகம் என பெயரிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் வவுனியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக இதுவரை 400 சிங்களமொழி மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
