பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல் -அனைத்து தேர்தல்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதம்

கலப்பு தேர்தல் முறையும் புதிய தேர்தல் முறையும் அமையும் வரை பழைய முறைமையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு நேற்று (24) பாராளுமன்றத்தில் கூடிய போதே அது இடம்பெற்றுள்ளது.

புதிய தேர்தல் முறைமை நிறுவப்படும் வரை மாகாண சபைகளை பழைய முறைமையிலேயே நடத்த வேண்டும் எனவும் தெரிவுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் உரிய தெரிவுக்குழுவை மீண்டும் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தேர்தல்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25% ஆக இருக்க பரிந்துரைப்பதும், இளைஞர் பிரதிநிதித்துவத்தை கட்டாயமாக்குவதும் கொள்கையளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட மற்றொரு முன்மொழிவாகும்.
புதியது பழையவை