மில்கோ நிறுவனத்தில் ஜனாதிபதி கோட்டாபய விஜயம்

நாரஹேன்பிட்டியில் உள்ள மில்கோ தொழிற்சாலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி தொழிற்சாலையின் உற்பத்தி செயல்முறை மற்றும் அதன் தரநிலையை கண்காணித்தார்.

தொழிற்சாலையை பார்வையிட்ட ஜனாதிபதி,  திரவ பால் கொள்வனவுகளில் காணப்படும் முரண்பாடுகளை களைவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தினார்.

ஜனாதிபதியின் இந்த கண்காணிப்பு விஜயத்தில் மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேரா, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கால்நடை, பண்ணை ஊக்குவிப்பு மற்றும் பால் மற்றும் முட்டை கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

புதியது பழையவை