வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழாவில் 5 பக்தர்களின் தங்கச் சங்கிலிகள் திருட்டு

யாழ். வடமராட்சி பிரதேசத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவின் போது, ஐந்து பக்தர்களின் தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்டு திருடப் பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப் பட்டுள்ளது.

வல்லிபுர ஆழ்வாரின் வருடாந்த மகோற்சவ தேர்த் திருவிழா நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை இடம்பெற்றபோது , ஆலயத்துக்கு வருகை தந்த பக்தர்களில் ஐந்து பேரின் தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன.

இவ்வாறு திருடப்பட்ட ஐந்து தங்கச் சங்கிலிகளும் 8 அரைப் பவுண் நிறையடைய சுமார் 10 இலட்ச ரூபா பெறுமதியானவை என பொலிஸார் தெரிவித்தனர்.

இம்முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத் துள்ளனர்.
புதியது பழையவை