நீதவான் வீட்டில் கொள்ளை- தேரர்கள் உட்பட 7 பேர் கைது

அம்பாறை, அக்கரைப்பற்றில் நீதவானின்வீடு உட்பட பல வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட கொள்ளை கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் மற்றும் , பௌத்த தேரர்கள் உட்பட 7 பேரை விசேட பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.

நீதவான் வீட்டில் கொள்ளையிட்ட தாலிக்கொடி உட்பட 55 பவுண் தங்க ஆபரணங்களையும் மீட்டுள்ளனர். இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி தலைமறைவாகியுள்ளார்.

தெமட்டகொடை சமந்தவின் கையாளான குணா அல்லது சத்தியா என்றழைக்கப்படும் மட்டக்களப்பை சேர்ந்த குணசீலன் என்பரே இவ்வாறு தலைமறைவாகியுள்ளார்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த  வருடம் நவம்பர் மாதம் 3 வீடுகளிலும் டிசெம்பர் 18 ஆம் திகதி நள்ளிரவு நீதவான் வீட்டிலுமாக ஒருமாதத்தில் 4 வீடுகளின் யன்னல்களை கழற்றி உள்நுழைந்த கொள்ளைக் கோஷ்டியினர், நித்திரையில இருந்த குடும்ப பெண்களின் கழுத்தில் இருந்த சுமார் 30 பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையிலேயே மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதியது பழையவை