மட்டக்களப்பு பிரதேசத்தில் வலம்புரி சங்கு கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் நேற்று இரவு குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக மாவட்ட குற்ற விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 3 இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், சந்தேக நபர் மட்டகளப்பு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



