வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களிலும் மழையுடனான வானிலை நிலவுமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இடியுடன்கூடிய மழைபெய்யும் சந்தர்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்பதுடன், மின்னல் தாக்கங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.
இதேவேளை, தொடர்ந்துவரும் வரட்சியான காலநிலை மாற்றமடையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
