பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பு இன்று ஆரம்பம்

அரசியல் மற்றும் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பு திட்டம் இன்று ஆரம்பமாகின்றது.

இதன் முதலாவது மக்கள் சந்திப்பு அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றம் நிதி அமைச்சர் பெஸில் ராஜபக்ஸ உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் கலந்துக்கொள்ள உள்ளனர்.

கொரோனா தொற்றை வெற்றிகொள்வதற்காக அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள், ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு, அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் தேர்தல் திட்டங்கள் என்பன தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை