லவன் உதவும் கரங்கள் நற்பணி மன்றத்தினால் உதவி

மட்டக்களப்பு மாவட்டம் கிரான் லவன் எழுச்சி கிராமத்தின் மக்களின் நன்மை கருதி ஒரு தொகுதி குடிநீர் குழாய் கிணறுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

மீள் குடியேற்ற கிராமமான இக் கிராமத்தில் நீண்ட காலமாக பல்வேறுபட்ட அடிப்படை வசதிகளற்ற நிலையில் சுமார் 80 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தங்களது குடிநீரை பெற்றுக் கொள்ள நீண்ட தூரம் சென்றே குடிநீரினை பெற்று வந்தனர். இவர்களது மேற்படி நிலைமையினை கவனத்தில் கொண்டு லவன் உதவும் கரங்கள் நற்பணி மன்றத்தினால் இவ் மனிதநேய உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை