பொருட்களின் விலையேற்றத்தினைக் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்

இ.சுதா-
நாட்டில் உள்ள பொருட்களின் விலையேற்றத்தினைக் குறைப்பதற்கு அரசாங்கம்  நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என
முன்னாள் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

பொருட்களின் விலை தினம் தோறும் அதிகரிப்பதனால் அன்றாடம் மிகக் குறைந்தளவான வேதனத்துடன் கூலி வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளதாகவும் இதனைச் சீர் செய்வதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

நாட்டில் உயர்தர வர்க்கத்தினரும், அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் தொழில் புரிகின்றவர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற வருமானத்தில் விலைவாசியினை எதிர் கொண்டு பொருளாதாரக் கட்டமைப்பிக்கு ஈடு கொடுக்கும் நிலையில் கீழ்மட்ட வருமானம் பெறுகின்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினிச் சாவினை எதிர் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் மக்களின் நலன் சார் விடயங்களுக்கு அரசாங்கமானது முன்னுரிமை வழங்க வேண்டும்.

இரசாயன உரத்தினை தடை செய்தமையால் வேளாண்மைச் செய்கை பாதிப்பினை எதிர் கொண்டுள்ள நிலையில் அதனை சீர் செய்வதற்காக அரசாங்கம் நெல்லின் விலையினை அதிகரித்துள்ளமை விவசாயிகளுக்கு நன்மையளித்துள்ள நிலையில் அன்றாடம் கூலி வேலை செய்து குறைந்தளவான வருமானம் ஈட்டுகின்ற மக்களுக்கு நெல்லின் விலை பாரிய பொருளாதாரச் சுமையினை ஏற்படுத்தி இருக்கின்றது. 

பொருட்களின் விலையேற்றத்தினைக் குறைத்து மக்களின் பொருளாதாரச் சுமையினை சீர் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டுமென கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
புதியது பழையவை