நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளாா்.
பொது மக்களின் பாதுகாப்பிற்காக இவ்வாறு படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த விசேட கட்டளை தொடர்பில் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
மேலும், 40ஆவது அதிகார சபையான பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது உறுப்புரையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாகவே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
