யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டி நோக்கிப் புறப்பட்ட சிறிய ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தடம்புரண்டதால் மூன்று நபர்கள் பலத்த காயத்துடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த சம்பவம் நேற்று காலை 11.30 மணியளவில் யாழ். மண்கும்பான் சந்தியில் உள்ள பிரதான வீதியில் உள்ள வெள்ளை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வயல் வெளியில் தடம் இடம்பெற்றுள்ளது.


