மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட திராய்மடு பகுதியிலிருந்து இன்று(04) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திராய்மடு,முருகன் ஆலயத்திற்கு அருகில் உள்ள காணியொன்றிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டதுடன் குறித்த நபர் பயணித்ததாக நம்பப்படும் மோட்டார் சைக்கிளும் அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



