கிளிநொச்சி A9 வீதியில் கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியின் வீதியோரத்திலிருந்து இன்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

