வவுனியாவில் மர்ம இயந்திரத்தை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா மடுகந்தை விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா மரக்கறிச்சந்தை பகுதியில் வைத்து கப் வாகனம் ஒன்று சோதனையிடப்பட்டது.
இதன்போது குறித்த வாகனத்தில் நிலத்தை ஆய்வு செய்வதற்கு பயன்படும் ஸ்கானர் இயந்திரம் ஒன்று எடுத்துச் செல்லப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை பரிசோதித்த போது நிலத்தை கண்காணிக்கப் பயன்படும் ஸ்கானர் இயந்திரம் என அடையாளம் காணப்பட்டது. அதனையடுத்து 5பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் வாகனத்தில் பயணித்தவர்களையும் கைது செய்த விசேட அதிரடிப்படையினர் அவர்களை வவுனியா காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


