எளிய பெரும்பான்மை தேர்தல் முறைமை மற்றும் விகிதாசார தேர்தல் முறைமைகளை உள்ளடக்கிய வகையில் கலப்பு தேர்தல் முறைமை ஒன்றினூடாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டத்திருத்தங்கள் தொடர்பிலான நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட செயற்குழுவில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நூற்றுக்கு 60 வீதம் எளிய பெரும்பான்மை முறையிலும், 40 வீதம் விகிதாசார முறையிலும் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான யோசனை இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்தகுழு அறிவித்துள்ளது.
மேலும் உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதோடு,மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
