கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கு நாடளாவிய ரீதியில் தட்டுப்பாடுகள் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.
கோதுமை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் டொலர் பற்றாக்குறையினால் கோதுமை இறக்குமதியினை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியிடம் டொலர்களை பெற்றுத்தருமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாகவும், கோதுமை இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சில்லரை வர்த்தகர்கள் கோதுமையை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
