குளவி கொட்டுக்கு இலக்காகி-தொழிலாளிகள் வைத்தியசாலையில்

பொகவந்தலாவ மேற்பிரிவு தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களே இவ்வாறு
குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயங்களுக்கு உள்ளான எட்டு பெண் தொழிலாளர்கள் மற்றும் ஆணொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளளர்.
புதியது பழையவை