மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட மாங்காடு சரஸ்வதி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் இன்று வியாழக்கிழமை (03) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இவ்வருடம் நூற்றாண்டு விழாக்காணும் பாடசாலை எங்கே, பிரச்சினையை உப அதிபராக நியமித்தது ஏன், கதிரைக்கு ஆள் தேவையில்லை அதிபர் ஒருவரே இங்கு தேவை, மேலதிக ஆசிரியர்களும், முடியாத புத்தகமும், சுயாதீனமாக நீருமில்லை சுத்திகரிக்க ஆளுமில்லை, மாணவர்களுக்கு ஏற்படும் அநீதியைச் சீர்செய்வது யார், பரீட்சைகளின் சித்தியின்மைக்கு காரணம் யார், மாணவர்கள் வேறு பாடசாலைக்குச் செல்வது ஏன், தேர்ச்சியின் உயர்ச்சியா மாணவர்கள் வெளிநாடு செல்வது, காலவதியான அதிபரும் சீரளிந்த மாங்காடும், பரிதாபம் மாணவர்கள், வேண்டும் வேண்டும் புதிய தகுதியான அதிபர், பாடத்திற்கு அமைய ஆசியரிர்கள், உயர் அதிகாரிகளே அதிபருக்குத் துணைபோக வேண்டாம், செயலாளர் அவர்களே ஆளுமையுடைய அதிபரை உடன் நியமி, உள்ளிட்ட பல வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மாங்காடு சரஸ்வதி மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் குறித்த பாடசாலை அதிபரிடம் கருத்துக் கேட்பதற்காக பாடசாலைக்குள் ஊடகவியலாளர்கள் சென்றபோது பாடசாலையின் உட்பக்கமாக வாயிற்கதவு பூட்டப்பட்டிருந்தது.



