பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் திடீரென வீதிக்கு வந்த கால்நடையுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குடும்பஸ்தர் படு காயமடைந்துள்ளார்.
இன்று (24) இரவு 7.30 மணியளவில் பளையில் இருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் குடும்பஸ்தர் பயணித்துகொண்டிருந்த வேளையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



