வவுனியா சென்ற ரயில் மோதி விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பலி

காலி - பூஸா பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரயிலுடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்த நான்கு பேர்  இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நான்கு பேர்  ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெலியத்த பிரதேசத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த ரஜரட்ட ரஜின விரைவு ரயிலில் இந்த முச்சக்கர வண்டி இன்று மோதுண்டுள்ளது. பூசா பகுதியில் வைத்து இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.

ரயில் கடவையை கடக்க முயற்சித்த போது முச்சக்கர வண்டி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


புதியது பழையவை