நாட்டை வீழ்ச்சிப்பாதையில் இருந்து மீட்டெடுப்பதற்கு மேலும் பல சுதந்திர போராட்டங்கள் அவசியமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொள்ளுபிட்டி பொல்வத்த ஶ்ரீ தர்மகீர்தயாராம விகாரைக்கு இன்று விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், பல்வேறு போராட்டங்களின் பின்னர் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடிந்துள்ளதா என்பதனை ஆராய வேண்டுமெனவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து குறுகிய மனப்பான்மையின்றி சிந்திக்க வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.
