சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப்பொருளில் ஆரம்பமாகிய மாபெரும் போராட்டம் செல்வபுரத்தில் நிறைவு பெற்றுள்ளது

சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து ஆரம்பமாகிய மாபெரும் போராட்டம் செல்வபுரத்தில் நிறைவு பெற்றுள்ளது.

இன்று காலை 11 மணிக்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து ஆரம்பமான இந்த கவனயீப்பு பேரணி செல்வபுரம் பகுதியில் நிறைவடைந்தது. போராட்டத்தில் மத தலைவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

புதியது பழையவை