கொழும்பின் புறநகர் தெஹிவளையில் 18 வயதான இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் இன்று (06-02-2022) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த கத்திக்குத்து சம்பவம் முரண்பாடு காரணமாகவே இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொலையாளி பிரதேசத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
