நாட்டில் சுற்றுலாத்துறைக்கான உத்தியோகபூர்வ மொபைல் செயலி ஒன்று இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுமென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
Visit Sri Lanka எனும் பெயரில் குறித்த மொபைல் செயலி தற்போது உருவாக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த செயலி அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் சுற்றுலாத்துறை தொடர்பான அனைத்து இடங்களுக்குமான பற்றுச்சீட்டினை வழங்க முடியுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த செயலியானது நாட்டின் சுற்றுலாத்துறையில் ஒரு திருப்புனையாக அமையுமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சுற்றுலா தலங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், பயணத் தகவல்கள், சுற்றுலா வழிகாட்டி மற்றும் பாதுகாப்பு அவசர சேவை உள்ளிட்ட விடயங்கள் இந்த செயலியில் உள்ளடக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
