அம்பாறை-அக்கரைப்பற்று பகுதியில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்ற சில கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்றில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நீதவான் ஒருவர் உள்ளிட்ட நான்கு வீடுகள் கொள்ளையிடப்பட்டு அங்கிருந்த தங்காபரணங்கள் பணம் ஆகியன கொள்ளையிடப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே சம்பவத்துடன் தொடர்புடைய கொள்ளையர்களை கைது செய்வதற்கு நான்கு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தனர்.


காரைதீவு வெட்டுவாய்க்கால் பகுதியில் சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய நேற்றிரவு குறித்த பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்,
இந்த சந்தரப்பத்தில் பொலிஸார் மீது சந்தேகநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன் இதன் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த பிரதான சந்தேகபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த பிரதான சந்தேகநபர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,
இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த இரண்டு தேரர்கள் உட்பட மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையோர் தப்பியோடியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் காரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
புதியது பழையவை