மின் விநியோகத்தடை குறித்து வெளியான மற்றுமொரு தகவல்

நாட்டில் திட்டமிடப்பட்டபடி இன்றைய தினம்   மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விடுமுறை தினம் என்பதன் காரணமாக மின்சார தேவை குறைவடையுமென எதிர்பார்க்கப்படுவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக் குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.  

இந்த நிலையில்,மின்சார பயன்பாட்டினை குறைக்குமாறு பொது மக்கள் மற்றும் நிறுவனங்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இதுவரை எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 37ஆயிரத்து 500 மெற்றிக்  தொன் டீசல் அடங்கிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் தற்போது நிலவிவரும் எரிபொருள் பற்றாக் குறையினை நிவர்த்தி செய்ய முடியுமென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

 இருப்பினும்,எதிர்வரும் காலங்களில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அவர்  தெரிவித்துள்ளார்.  

அத்துடன், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்,  நிதியை பெற்றுக்கொள்வதில் பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை