தலவாக்கலை பிள்ளையார் ஆலய பகுதியில் அமைந்துள்ள மரத்தை இன்று அகற்றும் சந்தர்ப்பத்தில், மரம் வீழ்ந்து, தேசிய பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனால் நுவரெலியா பிரதான வீதியின் தலவாக்கலை பகுதியில் இன்று மாலை அமைதியின்மை ஏற்பட்டது.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலவாக்கலை தமிழ் வித்தியாலயத்தில் பணிபுரியும் 2 பிள்ளைகளின் தந்தையான வேலுசாமி மகேஸ்வரன் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார்.
200 வருடம் பழைமை வாய்ந்த மரத்தினை வெட்டுவதற்கு அனுமதி கொடுத்தது யார்? என கோரி, பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.



