உக்ரேனில் உள்ள இலங்கை பிரசைகளை மிகவும் அவதானமாக செயற்படுமாறு வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
மேலும், உக்ரேனின் அன்காராவில் அமைந்துள்ள இலங்கைக்கான தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் கோரிக்கை விடுக்கபட்டுள்ளது.
அத்துடன், உக்ரேனின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கபட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, உக்ரேனுக்கான அநாவசிய பயணங்களில் இருந்து தவிர்ந்து செயற்படுமாறு இலங்கையர்களுக்கு விசேட அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.
இந்த நிலையில், உக்ரேனில் உள்ள 40 இலங்கையர்கள் தொடர்பில் தூதரகமானது நெருங்கிய தொடர்பில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவர்களில் 14 மாணவர்கள் இருப்பதாகவும், அவர்களின் நலன்கள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான போர் பதற்றமானது நாளுக்கு நாள்அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், உக்ரை எல்லைப் பகுதியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்ப்பட்ட ரஸ்யபடைகள் குவிக்க்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இந்த பின்னணியில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டுனெட்ஸ், லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக அங்கீகரிக்கரஸ்யா அங்கிகரித்துள்ளது.
இதேவேளை,உக்ரைனில் இருந்து ரஸ்ய எல்லைக்குள் நுழைய முயன்ற ஐந்து பேர் நேற்று கொல்லப்பட்டனர்.
அத்துடன்,எல்லைப் பகுதியில் ரஸ்ய இராணுவத்தின் பயிற்ச்சி நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்க்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, போர் பதற்ற நிலைமை மேலும் உக்கிரமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
ரஷ்யா யுக்ரைன் மீது படையெடுக்கும் பட்சத்தில்,கடுமையான மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையிடம் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நம்பகமான தகவல்கள் தம்மிடம் இருப்பதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
