மன்னம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவௌ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் வயலில் காணப்பட்ட தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான மின்கம்பியிலிருந்து சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொள்ள முயன்றபோதே அவர் இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹவௌ – செவனபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
