மட்டக்களப்பு -ஆரையம்பதி பிரதான வீதியில் வாகன விபத்து

மட்டக்களப்பு கல்முனை ஆரையம்பதி பிரதான வீதியில் நேற்றிரவு இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு நோக்கி இருவர் பயணித்த மோட்டார் சைக்கிளும், லொறி ஒன்றும் மோதுண்டதில் இவ்விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த இருவரும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற் கொண்டதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை