2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்ஷன் 198 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சைகளின் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகின.
இதில், கிடைக்கப்பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவனான த. கஜலக்ஷன் பெற்ற 198 புள்ளிகளே அதி கூடிய புள்ளிகளாகும்.
இதேவேளை, அச்சுவேலி ஆரம்பப் பாடசாலை மாணவன் வி.சுபானன் 192 புள்ளிகளைப் பெற்றுள்ளார். அத்துடன், அச்சுவேலி ஆரம்பப் பாடசாலையில் ரி.கபிஷனா 172 புள்ளிகளையும் எஸ்.சந்தோஷ் 164 புள்ளிகளையும் ஆர்த்திகா 155 புள்ளிகளையும் பி. சாயுரி 151 புள்ளிகளையும் யூ.தராங்கனி 151 புள்ளிகளையும் அக்ச ஷயன் 150 புள்ளிகளையும் மதுமிலா 148 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.

