நாட்டில் நாளைய தினமும் 7 மணித்தியாலத்திற்கும் அதிகமான மின் வினியோகத் தடைக்கு அனுமதி

நாட்டில் நாளைய தினமும் 7 மணித்தியாலத்திற்கும் அதிகமான காலப்பகுதிக்கு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த விடயத்தை இன்று அறிவித்துள்ளது.
இதற்கமைய காலை வேளையில் 5 மணித்தியாலமும் மாலை வேளையில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி காலை வேளையில் 8 மணி முதல் பிற்பகல் 6 மணி வரையிலான காலப்பகுதியில் 5 மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதுடன் மாலை 6 மணி முதல் 11 மணிவரையிலான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியால மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி நாளைய தினம் மொத்தமாக 7 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனிடையே இன்றைய நாளிலும் 7 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை