புத்தாண்டு காலத்தில் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் – பொலிஸார்

புத்தாண்டு காலத்தில் மேற்கொள்ளப்படும் பயணங்கள் அல்லது உல்லாசப் பயணங்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

இவ்வாறு பதிவிடுவதன் மூலம் மக்கள் குற்றச்செயல்களுக்கு பலியாக நேரிடும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், நகைகள் போன்றவற்றை போதைக்கு அடிமையானவர்களிடமிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதியது பழையவை