வங்காள விரிகுடா கடற்பரப்பில் விருத்தியடைந்த தாழமுக்கம்-பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று(03ஆம் திகதி) பிற்பகல்11.30 மணிக்கு வட அகலாங்கு 7.80 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 83.10 E இற்கும் அருகில் திருகோணமலை கரையிலிருந்து தென்கிழக்காக220 கிலோ மீற்றர்தூரத்தில் மையம் கொண்டிருந்தது. 

இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்ததாகவும் கரையிலிருந்து விலகியும் நகர்ந்து அடுத்த 48 மணித்தியாலங்களில் வட தமிழ்நாட்டுக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
புதியது பழையவை