கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பாண் இறாத்தல் ஒன்றின் விலை 20 முதல் 30 ரூபா வரை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், பணிஸ் ஒன்றின் விலை பத்து ரூபாவாலும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையும் அதிகரிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
